எங்களை பற்றி...

1938 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 30 ஆம் திகதி பெஹேரே வாவிக்கு அருகில் ஒரு சிறிய இடத்தில் சில அங்கத்தவர்களைக் கொண்ட குழுவால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனமாகும். எமது சங்கம் “போட் ஹவூஸ்” எனும் மறுபெயரினால் எல்லோரிடத்திலும் பிரசித்தி பெற்றுள்ளது. வரையறுக்கப்பட்ட சுகாதார திணைக்களத்தின் கூட்டுறவூச் சிக்கனக் கடனுதவிச் சங்கம் நிறுவனமாக மற்றும் கூட்டுறவு நிறுவனமாகவும செயல்படுவதோடு, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும்; சுகாதார நிலையங்களில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் உட்பட பல்வேறு பதவிகளை வகிக்கும் ஊழியர்களை கொண்ட சங்கமாகும். இதுவரையில் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட செயற்பாட்டிலுள்ள அங்கத்தவர்களை கொண்ட எமது சங்கம் நிறுவனங்கள் ரீதியில் சங்கங்களுக்கிடையில் நாடளாவிய ரீதியில் முதன்மை இடத்தை பெற்ற நிறுவனமாகும். எமது சங்கத்தின் பிரதான நோக்கமான சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வழங்குதல், பல்வேறான நலன்புரித் திட்ட வசதிகளை வழங்கி அங்கத்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படும் நிறுவனமாகும். தற்போது சலுகை வட்டி வீதத்தின் பல்வேறு கடன் திட்ட முறைகள் ஊடாக மற்றும் பல நலன்புரித் திட்டங்கள் மூலமாக அங்கத்தவர்களுக்கு தரமான மற்றும் வினைத்திறனான சேவைகளை வழங்குகின்றது. தற்போது நடைமுறையில் உள்ள நலன்புரித் திட்டங்களில் மரணசகாய நிதியுதவி, அன்னியோன்ய நிதியுதவி, ஓய்வூதிய நிதியுதவி, புலமைப்பரிசில் நிதியுதவி போன்ற நலன்புரித் திட்டங்கள் அங்கத்தவர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இவற்றில் “ திரியதரு பிரணாம” புலமைப்பரிசில் திட்ட முறை “சிசு திரிய” புத்தகக் கடன் வேலைத்திட்டம் அனைத்து அங்கத்தவர்களிடையில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

மேலும் இதுவரையில் நலன்புரித் திட்டங்களின் கீழ் கதிர்காமம், புஸ்ஸதேவ மாவத்தையில் இலக்கம் 222/22 கொண்ட இடத்தில் சுவசெவன விடுமுறைத் தங்குமிடம் 15 வருடங்களாக எம்மால் கொண்டு நடாத்தப்படுகின்றது. இவ் வேலைத்திட்டம் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக மிகவும் அமைதியான சூழலில், வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட மற்றும் குளிரூட்டப்படாத வசதிகளுடன் கூடிய அறைகளுடன் அமைந்துள்ளது. சுவசெவன விடுமுறைத் தங்குமிடம் நியாயமான விலையின் கீழ் தங்குமிட வசதிகளை வழங்குகின்ற கதிர்காம பிரதேசத்திலுள்ள அங்கத்தவர்கள் மற்றும் அங்கு வருகை தரும் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த இடமாகும்.

மேலும் சசெத் அச்சகம் எமது சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மற்றுமொரு வேலைத் திட்டமாகும் இலங்கை தேசிய கூட்டுறவு சபைக்கு உரித்தான கொழும்பு கிரான்பாஸ்; நெகோசில் எனும் பெயரால் அழைக்கப்பட்ட அச்சகம் எமது சங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டது. அனைத்து வகையான அச்சக செற்பாடுகளையும் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் “ சசெத்” அச்சகம் எனும் பெயரால் அது மறுசீரமைக்கப்பட்டு கொண்டு நடாத்தப்படுகின்றது. எமது அச்சக பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வினைத்திறனான, தரமான சேவையை வழங்குவதன் மூலம் அச்சக சந்தையினுள் போட்டியான நிறுவனமாக மேலும் விரிவடைதல் மற்றும் நிலைநிறுத்துவதே எமது நோக்கமாகும்.

எமது நோக்கம்

அனைத்து அங்த்தவர்களும் எதிர்பார்க்கும் நோக்;கங்களை இணங்கண்டுääஅவர்களது எதிர்பார்ப்புகளை சரியாகவும் செயற்திறனாகவும் வெளிப்படைத் தன்மையுடன் நிறைவேற்றிக் கொள்வற்காக ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்து அரசமற்றும் தனியார் துறையில் முன்னணி நிறுவனமாகுதல் ஆகும்.

குறிக்கோள்

அங்கத்தவர்களின் தேவைக்கேற்ப அனைத்து கொடுக்கல் வாங்கல்கள்ääவியாபாரம்ää நலன்புரி மற்றும் சமூக செயற்பாடுகளை அங்கத்தவர்களுக்கும் அவர்களில் தங்கிவாழ்வோருக்கும் அனைத்து பொதுமக்களுக்கும் தரமான முறையில் வழங்குவதாகும்.

இயக்குநர்கள் குழு


Mr. T.G. Bandula Jayakody

President

Mr. W.A.D. Wimalaratne

Secretary
...
மற்ற இயக்குநர்கள் குழு - பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

திட்டங்கள்

ஊழியர்கள்

நிர்வாகிகள்

சேவைகள்

சேமிப்பு

சிக்கன பழக்கத்தை தூண்டுவதற்காக சேமிப்பதற்கு ஊக்குவித்தல்.

சிறுவர் சேமிப்பு

சுவசெனஹச சிறுவர் சேமிப்பு கணக்குத் திட்ட முறை.

அங்கத்துவர்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல

கடன் வேலைத்திட்டங்களின் மூலம் அங்கத்தவரின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்குதல்.

சலுகை வட்டி விகிதம்

அதற்காக சலுகை வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக அன்றிலிருந்து கொண்டு நடத்துதல்.

அன்னியோன்ய நிதியுதவி திட்டம்

அன்னியோன்ய நிதியூதவித் திட்டத்தின் மூலம் அங்கத்தவர்களின் நலனுக்காக அங்கத்தவர்களின் பொருளாதார பாதுகாப்பிற்காக அங்கத்தவர் ஓய்வூ பெறும் போது பங்களிப்பிற்கு அமைய பிரதிபலனை வழங்குதல்.

ஓய்வதிய கொடுப்பனவு

ஓய்வூதிய உதவித்தொகையின் மூலம் அங்கத்தவர்கள் சேவையில் ஓய்வு பெறும் போது அங்கத்துவ நலனுக்காக மற்றும் அங்கத்தவர்களின் பொருளாதார பாதுகாப்பிற்காக ஓய்வூதிய உதவித்தொகையை வழங்குதல்.

மரணசகாய நிதியுதவி திட்டம

மரணசகாய நிதி உதவித் தொகையின் மூலம் அங்கத்தவர்களுக்கு மற்றும் தங்கிவாழ்பவர்களின் மரணத்திற்காக உதவித்தொகையை வழங்குதல்.

திரியதரு பிரணாம புலமைப்பரிசில்

திரியதரு பிரணாம புலமைப்பரிசி;ல் வேலைத்திட்டத்தின் மூலம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மற்றும் க.பொ.த.உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளுக்காக உதவித் தொகைஇ நினைவுச் சின்னம். மற்றும் சான்றிதழ் வழங்குதல் மற்றும் தேசிய மட்டத்தில் வைபவமொன்றினை ஏற்பாடு செய்து பிள்ளைகளை கௌரவித்தல்.

ஓவியப் போட்டி

திரியதரு சித்திரப் போட்டியின் மூலம் அங்கத்துவ பிள்ளைகளின் கலைத்திறன்களை ஊக்கப்படுத்துவதன் ஊடாக போட்டியை நடாத்துதல் மற்றும் அவ் வெற்றிப் பெற்ற சித்திரங்கள் உள்ளடங்கிய நாற்காட்டியை அச்சிடுதல்.

மாணவர் ஊக்குவிப்பு புத்தக கடன் திட்டம்

சிசுதிரிய புத்தகக் கடன் வேலைத்திட்டத்தின் கீழ் அங்கத்தவர்களுக்கு விலைக்கழிவுடன் கொடுப்பனவு செய்யும் முறையில் வருடாந்தம் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள்இ பாடசாலை பை (டீயப) மற்றும் னுளுஐ வவுச்சர் படிவங்கள் பெற்றுக்கொள்வதற்கான வாய்;பை வழங்குதல்.

சுவசெவன தங்குமிடம்

சுவசெவன விடுமுறை தங்குமிடத்தின் மூலம் அங்கத்தவர்கள் மற்றும் வெளி நபர்களுக்காக கதிர்காமத்தில் தங்குமிட வசதிகளை வழங்குவதற்கான வாய்பை பெறுதல்.

சுசெத் அச்சகம்

சசெத் அச்சகத்தின் மூலம் அச்சிட்டு நடவடிக்கைகளை வினைத்திறனாகவும் மற்றும் விரைவாகவும் பெற்றுக் கொள்வதற்கான வாய்பை வழங்குதல்.

காப்புறுதி சேவை

கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்துடன் கைகோர்த்து அனைத்து அங்கத்தவர்களுக்கும் மற்றும் வெளி தரப்பினர்களுக்கும் காப்புறுதி சேவை நடவடிக்கைகளுக்கான வசதிகளை வழங்குதல்.

தொடர்புகளுக்கு

Address

வரையறுக்கப்பட்ட சுகாதாரத் திணைக்களத்தின் கூட்டுறவூச் சிக்கனக் கடனுதவிச் சங்கம்
37/36, பன்சல வீதி,
கொழும்பு 10,
இலங்கை.

மின்னஞ்சல்/ தொலைநகல்

மின்னஞ்சல்: info@hdts.lk


தொலைநகல்: +94 11 2678163,
+94 11 2662292

தொலைபேசி

+94 11 2676088,
+94 11 2676099,
+94 11 2685016,
+94 11 2662870